செய்திகள்

நடிகர் அஜித்தின் வலிமையுடன் மோதும் பிரம்மாண்ட படம் : வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

பொங்கலை முன்னிட்டு நடிகர் அஜித்தின் வலிமையுடன், ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் படமும் வெளியாகவுள்ளது. 

DIN


பொங்கலை முன்னிட்டு நடிகர் அஜித்தின் வலிமையுடன், ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் படமும் வெளியாகவுள்ளது. 

நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாகியிருக்கும் வலிமை திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகிறது. வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் இருந்து கிளிம்ப்ஸ் விடியோ சமீபத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்திருந்தது. 

இந்த நிலையில் ராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ராம் சரண் இணைந்து நடித்துள்ள ஆர்ஆர்ஆர் படத்தின் வெளியீடு இன்று(அக்டோபர் 2) அறிவிக்கப்பட்டது. அதன்படி இந்தப் படம் அடுத்த ஆண்டு ஜனவரி 7 ஆம் தேதி வெளியாகவுள்ளது. பொங்கல் விடுமுறையை முன்னிட்டு ஒரு வாரம் முன்னதாக இந்தப் படம் வெளியாகிறது. 

வலிமை மற்றும் ஆர்ஆர்ஆர் என மிகப் பெரிய படங்கள் பொங்கலை முன்னிட்டு வெளியாகவுள்ளதால் போட்டி கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், நடிகர் விஜய்யின் பீஸ்ட் மற்றும் நடிகர் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் ஆகிய படங்களின் வெளியீட்டுத் தேதியும் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

புதுகை ஆட்சியரகத்தில் விவசாயி தற்கொலை முயற்சி

வடகவுஞ்சி கிராமத்தில் வனத்துறை விதித்த கட்டுப்பாடுகளுக்கு பொதுமக்கள் எதிா்ப்பு

ஆன்லைன் வா்த்தக மோசடி மூலம் ரூ.11 லட்சம் கொள்ளை: 2 போ் கைது

சரக்கு வேன் கவிழ்ந்து ஓட்டுநா் உயிரிழப்பு

திருமால் கிராம கல் குவாரிக்கான அனுமதியை ரத்து செய்யக் கோரி மனு

SCROLL FOR NEXT