செய்திகள்

எருமை மாட்டைப் பலியிட்டு, ரத்தத்தைத் தெளித்து நடிகரின் பிறந்தநாள் கொண்டாட்டம்: அதிர்ச்சி சம்பவம்

எருமை மாட்டைப் பலியிட்டு அதன் ரத்தத்தை நடிகர் சுதீப்பின் படத்தில் தெளித்து ரசிகர்கள் பிறந்தநாள் கொண்டாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

DIN

எருமை மாட்டைப் பலியிட்டு அதன் ரத்தத்தை நடிகர் சுதீப்பின் படத்தில் தெளித்து ரசிகர்கள் பிறந்தநாள் கொண்டாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

'நான் ஈ', 'புலி' படங்களின் மூலம் தமிழில் பிரபலமானவர் கிச்சா சுதீப். கன்னட திரையுலகில் முன்னணி கதாநாயகனான இவர், தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் முன்னணி வேடங்களில் நடித்து வருகிறார். 

இந்த நிலையில் அவரின் 50 நாள் பிறந்த நாள் விழா ரசிகர்கள் சார்பில் நேற்று (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்பட்டது. ரசிகர்கள் அவரது கட்டவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்து பிறந்த நாளைக் கொண்டாடினர்.

இந்த நிலையில் கர்நாடகம் பெல்லாரி மாவட்டம் சந்தூர் என்ற கிராமத்தில் நூற்றுக்கணக்கான சுதீப் ரசிகர்கள் ஒன்று கூடி கட் அவுட் வைத்து பிரம்மாண்டமாக பிறந்தநாள் கொண்டாடினர். 

அப்போது சில ரசிகர்கள் அங்கு எருமை மாட்டை அழைத்து வந்து, அதைப் பலியிட்டு அந்த ரத்தத்தைக் கட் அவுட் மீது தெளித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி காண்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனையடுத்து பெல்லாரி நகர் காவல்துறையினர் சுதீப் ரசிகர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராணுவத்தில் உயிரி எரிபொருள் பயன்பாடு! அதிகாரப்பூர்வ தொடக்கம்!

அபிஷேக் சர்மாவின் விக்கெட் எங்களுக்கு மிகவும் முக்கியம்: மார்க்ரம்

கோவா களிப்பு... ஷ்ரத்தா தாஸ்!

உங்களுக்குப் பிடித்தது எது?.... ராஷி சிங்!

நடிக்க மறுத்த ஐஸ்வர்யா ராய், அதிக சம்பளம் கேட்ட சிவாஜி... ரஜினி பகிர்ந்த படையப்பா பட அனுபவங்கள்!

SCROLL FOR NEXT