காதலருடன் தீபாவளி கொண்டாடிய ஸ்ருதி ஹாசன்: வெளியான புகைப்படம் வைரல்
நடிகை ஸ்ருதி ஹாசன் தனது காதலருடன் பிறந்த நாள் கொண்டாடிய புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
பிரபலங்கள் பலரும் தங்கள் தீபாவளி கொண்டாடும் விடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இந்த நிலையில் நடிகை ஸ்ருதி ஹாசன் தனது காதலருடன் தீபாவளி கொண்டாடிய புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதையும் படிக்க | 'அண்ணாத்த' படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா ? : எதிர்மறை விமர்சனங்களை முறியடித்து சாதனை
இதுகுறித்து அவர் எழுதியுள்ள பதிவில், ''நாங்கள் தீபாவளி கொண்டாடிய போது... உங்களுக்கும் உங்களது குடும்பத்தினருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ருதி ஹாசன் தற்போது 'கேஜிஎஃப்' இயக்குநரின் 'சலார்' படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கிறார். மேலும் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவின் 107வது படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். இந்தப் படத்தை கோபிசந்த் மல்லினேனி இயக்குகிறார்.