FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

’ராதே ஷியாம்' படத்தின் சிறப்பு டீசர் அக்.23 வெளியீடு

வம்சி மற்றும் பிரமோத் பிரமாண்ட பொருட்செலவில் தயாரிக்கும் ராதா கிருஷ்ண குமார் இயக்கத்தில் உருவாகி வரும் பிரபாஸ் நடிக்கும் ராதே ஷியாம் படத்தின் சிறப்பு டீசர் அவரது பிறந்த நாளான அக்டோபர் 23 அன்று வெளியாக

Updated On : 20 அக்டோபர் 2021, 11:12 am IST
’ராதே ஷியாம்' படத்தின் சிறப்பு டீசர் அக்.23 வெளியீடு
பகிர்:

வம்சி மற்றும் பிரமோத் பிரமாண்ட பொருட்செலவில் தயாரிக்கும் ராதா கிருஷ்ண குமார் இயக்கத்தில் உருவாகி வரும் பிரபாஸ் நடிக்கும் ராதே ஷியாம் படத்தின் சிறப்பு டீசர் அவரது பிறந்த நாளான அக்டோபர் 23 அன்று வெளியாகிறது. 

பிரபாஸின் கதாபாத்திரமான விக்ரமாதித்யா குறித்த இந்த சிறப்பு டீசர் ஆங்கிலத்தில் வசனங்களை கொண்டிருக்கும். பல்வேறு மொழிகளில் சப்-டைட்டில்களோடு இது வெளியாகும். 

பிரபாஸ் ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கும் ராதே ஷியாம், ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பை ஏற்கனவே உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் அக்டோபர் 23 அன்று டீசர் வெளியாவதை அறிவிக்கும் வகையில் போஸ்டர் ஒன்றை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர். ஸ்டைலான போஸில் பிரபாஸ் எதையோ யோசிப்பதை இதில் காணலாம். 'விக்ரமாதித்யா யார்?' என்ற கேள்வியோடு இது வெளியாகியுள்ளது.

சமீபத்தில் பூஜா ஹெக்டேவின் சிறப்பு போஸ்டர் அவரது பிறந்தநாளில் வெளியிடப்பட்டது. இப்போது பிரபாஸின் பிறந்தநாளை முன்னிட்டு இந்த சிறப்பு போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. 

பல்வேறு மொழிகளில் ஜனவரி 14, 2022 அன்று வெளியாகவுள்ள ’ராதே ஷியாம்’ திரைப்படத்தை வம்சி மற்றும் பிரமோத் தயாரித்துள்ளனர். ராதா கிருஷ்ண குமார் இயக்கியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments