முகப்பு
செய்திகள்

'விஜய் சாரோட பெரிய ரசிகன்': பீஸ்ட் டிரெய்லரை வெளியிட்ட வருண் தவான்

விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தின் ஹிந்தி டிரெய்லரை நடிகர் வருண் தவான் வெளியிட்டுள்ளார்.  

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:53 AM
பகிர்:


நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் வருகிற 13 ஆம் தேதி வெளியாகிறது. இந்த நிலையில் இந்தப் படத்தின் ஹிந்தி டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. 

ஹிந்தி டிரெய்லரை பகிர்ந்த நடிகர் வருண் தவான், பீஸ்ட் ஹிந்தி டிரெய்லரை வெளியிடுவதில் மகிழ்ச்சி.எப்பொழுதும் நான் விஜய் சாரின் பெரிய ரசிகன் எனக் குறிப்பிட்டுள்ளார். தெலுங்கு டிரெய்லர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகிறது.

முன்னதாக அரபிக் குத்து பாடலின் ஹிந்தி மற்றும் தெலுங்கு பதிப்பு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மனோஜ் பரமஹம்சா இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.