செய்திகள்

நயன்தாராவின் ‘கனெக்ட்’: டிரைலர், ரிலீஸ் தேதி அறிவிப்பு!

DIN

மாயா, இறவாக்காலம், கேம் ஓவர் ஆகிய படங்களை இயக்கியவர் அஸ்வின் சரவணன். இவர் நடிகை நயன்தாராவை முன்னணி கதாபாத்திரமாக வைத்து அடுத்து இயக்கி வரும் படம் - கனெக்ட். 

ரெளடி பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் நயன்தாராவுடன், அனுபம் கெர், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். நடிகை நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு இந்தத் திரைப்படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு பிருத்வி சந்திரசேகர் இசையமைத்துள்ளார்.  

தற்போது இந்தப் படத்தின் டிரைலர் வெள்ளிக் கிழமை (டிச.9) நள்ளிரவு 12 மணிக்கு வெளியாகுமென அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் திரைப்படம் டிசம்பர் 22ஆம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ம.பி.: பாஜகவில் இணைந்தார் காங். எம்எல்ஏ

பாலியல் குற்றச்சாட்டு: மஜத எம்.பி. பிரஜ்வல் ரேவண்ணா கட்சியில் இருந்து இடைநீக்கம்

'இந்தியா' கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவாக 'வாக்கு ஜிஹாத்'

கர்நாடகத்துக்கு மத்திய பாஜக அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு: ஜெ.பி.நட்டா

பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசியல் சாசனத்தைத் தூக்கியெறிந்துவிடும்

SCROLL FOR NEXT