செய்திகள்

விஜய்யின் முதல் பான் இந்திய படமாகும் ‘தளபதி 67’! 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருக்கும் ‘தளபதி 67’ படம் பான் இந்திய படமாக வெளியாகுமென தகவல் வெளியாகியுள்ளது. 

DIN

விக்ரம் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக தளபதி 67 படத்தின் முன் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டுவருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் துவங்கும் என்று கூறப்படுகிறது. 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்க உள்ளார். 

இந்தப் படத்திற்கு வில்லன் யார்யார் பெயரெல்லாமோ அடிப்பட்டது. கடைசியாக விஷால் நடிப்பதாக பேசப்பட்டது. ஆனால் அவர் கால்சீட் கொடுக்காததால் இன்னும் வில்லன் யார் என தெரியவில்லை. 

முன்னதாக, இந்தப் படத்தில் காதல் காட்சிகள், பாடல்கள் எதுவும் இல்லாமல் கைதி படம் போன்று முழுக்க முழுக்க ஆக்சன் படமாக இருக்கும் என தகவல் வெளியாகியிருந்தது. காதல் காட்சிகள், பாடல்கள் இல்லாமல் வெளியாகும் முதல் விஜய் படமாக தளபதி 67 இருக்கப்போகிறது. 

லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸில் தளபதி 67 படம் இருக்கும் என நடிகர் நரேன் கூறியதாக தற்போது சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகியதும் குறிப்பிடத்தக்கது. 

வாரிசு திரைப்படம் பொங்களுக்கு தமிழ் தெலுங்கில் வெளியாக உள்ளது.  இந்நிலையில், ஹிந்தி நடிகர் சஞ்சய் தத் இந்தப்படத்தில் நடிப்பதாகவும் இதுதான் விஜய்யின் முதல் பான் இந்தியப் படமாக வெளியாக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் நடிகர்கள் நடிகைகள் பற்றி விரைவில் அறிவிப்பு வெளியாகுமென தகவல் வெளியகையுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நின்ற லாரி மீது காா் மோதல் நிதிநிறுவன அதிபா் உயிரிழப்பு

புதுகையில் நாளை ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடைபெறும் இடங்கள்

இருசக்கர வாகனத்திலிருந்து தவறிவிழுந்து முதியவா் பலி

ராஜீவ்காந்தி பிறந்தநாள் விழா

காலணி விற்பனையகத்தில் ரூ. 45 ஆயிரம் திருட்டு

SCROLL FOR NEXT