செய்திகள்

கௌதம் மேனன் வெளியிட்ட ‘தீர்க்கதரிசி’ படத்தின் அப்டேட்! 

இயக்குநர் கௌதம் மேனன் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘தீர்க்கதரிசி’ படத்தின் முதல்பார்வை போஸ்டரை வெளியிட்டுள்ளார். 

DIN

அஞ்சாதே படத்தில் நடித்து பிரபலமானவர் அஜ்மல் அமீர். பின்னர் கோ, மாற்றான் படங்களின் மூலம் கவனம் பெற்றவர் பிறகு சரியான வெற்றி படங்கள் கிடைக்காமலே நடித்து வந்தார். சமீபத்தில் பிரேமம் இயக்குநரின்  கோல்டு படத்தில் நயன்தாராவுக்கு மாப்பிள்ளையாக நடித்திருந்தார். 

இந்நிலையில், தற்போது சதிஷ் குமார் தயாரிப்பில் பி.ஜி. மோகன் - எல்.ஆர். சுந்தரபாண்டி இணைந்து இயக்கும் ‘தீர்க்கதரிசி’ படத்தின் முதல் பார்வை போஸ்டரை இயக்குநர் கௌதம் மேனன் வெளியிட்டுள்ளார். 

இந்தப் படத்திற்கு தயாரிப்பாளர் சதீஷ்குமாரே திரைக்கதை எழுதியுள்ளார். பாலசுப்ரமணியன் இசையமைக்க, லக்‌ஷ்மன் ஒளிப்பதிவு செய்கிறார். விவேக், விவேகா இருவரும் இணைந்து பாடல்களை எழுதியுள்ளனர். முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டுள்ள படக்குழு ரசிகர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”கர்வமில்லாத மனிதர் நல்லகண்ணு!” நடிகர் எம்.எஸ். பாஸ்கர் மரியாதை!

கோடிங் டெவலப்பர்கள் பற்றி ஸ்ரீதர் வேம்பு கருத்து!

தஞ்சாவூர் மாவட்டத்துக்கு மார்ச் 2ல் உள்ளூர் விடுமுறை!

ஃபியூச்சர்ஸ் வர்த்தகத்தில் வெள்ளி கிலோவுக்கு ரூ. 3,264 ஆக சரிவு!

கா்நாடக சுகாதாரத் துறையில் மருந்து பற்றாக்குறை: பாஜக விஜயேந்திரா கண்டனம்

SCROLL FOR NEXT