செய்திகள்

'தளபதி 67' படத்தில் சூர்யா? ட்விட்டரில் சூர்யா செய்த செயல்!

DIN

விக்ரம் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக தளபதி 67 படத்தின் முன் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் துவங்கும் என்று கூறப்படுகிறது. 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்க உள்ளார்.

இந்தப் படத்திற்கு வில்லன் யார்யார் பெயரெல்லாமோ அடிப்பட்டது. விஷால் நடிப்பதாக பேசப்பட்டது. ஆனால் அவர் கால்சீட் கொடுக்காததால் இன்னும் வில்லன் யார் என தெரியவில்லை. இந்தப் படத்தில் பாடல்கள் இல்லாமல் கைதி படம் போன்று முழுக்க முழுக்க ஆக்சன் படமாக இருக்கும் என லோகேஷ் தெரிவித்துள்ளார். காதல் காட்சிகள், பாடல்கள் இல்லாமல் வெளியாகும் முதல் விஜய் படமாக தளபதி 67 இருக்கப்போகிறது. 

லோகேஷ் சினிமாடிக் யுனிவர்ஸில் தளபதி 67 படம் இருக்கும் என நடிகர் நரேன் கூறியதாக தற்போது சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகியதும் குறிப்பிடத்தக்கது.

இந்தப் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தியில் வெளியாக உள்ளது.  நடிகர் சூர்யா தளபதி 67 படத்தின் ட்விட்டு ஒன்றுக்கு லைக் செய்திருந்தார். பின்னர் அந்த லைக்கை எடுத்துவிட்டிருக்கிறார். இதன் மூலம் சூர்யா விஜய் படத்தில் நடிப்பாரோ என்று ரசிகர்கள் யூகித்து வருகின்றனர். ஆனால் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும்வரை ரசிகர்கள் காத்திருந்தாக வேண்டும். விரைவில் படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

“நான்_முதல்வன்” திட்டம் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

கறுப்புப் பூனை...!

ரே பரேலியில் ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல்!

ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யுமா கொல்கத்தா?

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

SCROLL FOR NEXT