செய்திகள்

''பீஸ்ட்' பத்தி நான் சொன்னது தப்புதான்'' - மன்னிப்புக் கேட்ட மலையாள நடிகர்

பீஸ்ட் குறித்து தெரிவித்த கருத்துக்கு மலையாள நடிகர் ஷைன் டாம் சக்கோ மன்னிப்புக் கேட்டார். 

DIN

பீஸ்ட் குறித்து தெரிவித்த கருத்துக்கு மலையாள நடிகர் ஷைன் டாம் சக்கோ மன்னிப்புக் கேட்டார். 

மலையாள நடிகரான ஷைன் டாம் சக்கோ நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்த பீஸ்ட் படத்தில் தீவிரவாதியாக நடித்திருந்தார். பீஸ்ட் படத்தில் ஷைன் டாம் சக்கோவின் கதாப்பாத்திரம் சிறியதாக இருப்பதாக அவரது ரசிகர்கள் வருத்தம் தெரிவித்தனர். 

மேலும் ஒரு பேட்டியில் ஷைன் டாம் சக்கோ பீஸ்ட் படத்தில் சில தவறுகள் இருப்பதாகவும், படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை எனவும் குற்றம்சாட்டினார். இதனையடுத்து விஜய் ரசிகர்கள் அவரை சமூக வலைதளஙங்கள் வாயிலாக கடுமையாக சாடினர். 

இதனையடுத்து ஷைன் டாம் சக்கோ, நான் ஊடகத்தின் வாயிலாக பேசியதற்கு மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். அது என்  தவறுதான் என்றுபேசியுள்ளார். 

பீஸ்ட் திரைப்படம் கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. விஜய் ரசிகர்களைக் கூட அந்தப் படம் கவரவில்லை. இதன் காரணமாக இயக்குநர் நெல்சன் விஜய் ரசிகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பள்ளியில் பெண்கள் பாதுகாப்பு விழிப்புணா்வு முகாம்

இந்தியாவுக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் என்ன வித்தியாசம்? ரசிகை ஆவேசம்

Untitled Nov 03, 2025 10:37 pm

இறுதி வரை முன்னேறினாலும்... தென்னாப்பிரிக்காவைத் துரத்தும் சோகம்!

கொண்டாட்ட நாள்... சம்யுதா!

SCROLL FOR NEXT