செய்திகள்

ஷாருக் கான் படத்தில் விஜய்!

ஷாருக் கான் நடிக்கும் ஜவான் திரைப்படத்தில் நடிக்கப் போகிறாரா நடிகர் விஜய்? புதிய தகவல்...

DIN

இயக்குநர் அட்லீ இயக்கத்தில் ஷாருக் கான் நடிக்கும் ஜவான் திரைப்படத்தில் கௌரவத் தோற்றத்தில் வரப் போகிறார் நடிகர் விஜய்  என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஷாருக் கானின் ஜவான் படத்தின் மூலம் ஹிந்தியில் முதல்முதலாக இயக்குநராக அறிமுகமாகிறார் அட்லீ.

ஏற்கெனவே தமிழில் விஜய்யை வைத்து பிகில், மெர்சல், தெறி என்று மூன்று சூப்பர் ஹிட் படங்களைத் தந்த இளைஞர் அட்லீ. எனவே, இந்தப் படத்தில் விஜய் தோன்றுவதில் வியப்பில்லை.

இதுபற்றி உறுதி செய்யப்பெற்றதும், அனேகமாக செப்டம்பர் இரண்டாவது வாரத்தில் விஜய்யும் ஷாருக் கானும் பங்கேற்கும் காட்சிகள் சென்னையில் எடுக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. லொகேஷன் முடிவு செய்யப்பட்டதும் செட் அமைக்கும் பணிகள் தொடங்கப்படும்.

இந்தப் படத்தில் முக்கியமான பாத்திரத்தில் நயன்தாரா நடிக்கிறார். ஷாருக் கானுடன் நயன்தாரா நடித்த சில காட்சிகள் அண்மையில் மும்பையில் எடுக்கப்பட்டது குறிப்பிடத் தக்கது.

இதனிடையே, வில்லனாகக் கலக்கிக் கொண்டிருக்கும் விஜய் சேதுபதியும் யோகி பாபுவும்கூட இந்தப் படத்தில் இடம் பெறக் கூடும் என்றும் கோடம்பாக்கத்தில் வலுவாகப் பேசப்படுகிறது. ஆனால், இது பற்றி அதிகாரப்பூர்வமாக இதுவரை எதுவும் அறிவிக்கப்படவில்லை.

2023 ஜூன் 2 ஆம் தேதி ஜவான் திரைப்படத்தை வெளியிடுவதெனத் திட்டமிட்டுப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியிடப்படவுள்ள 'பான் இந்திய' படமான ஜவான் திரைப்படத்துக்கு இசையமைப்பவரும் தமிழ்த் திரையுலகைச் சேர்ந்தவர்தான் - அனிருத்.

நடிகரும் இயக்குநருமான விஜய்யின் நண்பருமான பிரபுதேவா இயக்கத்தில் அக் ஷய் குமார் நடிப்பில் 2012-ல் ஹிந்தியில் வெளியான ரௌடி ரதோர் திரைப்படத்திலும் கௌரவத் தோற்றத்தில் விஜய் தோன்றினார் என்பது குறிப்பிடத் தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் உயர்ந்து ரூ.87.53 ஆக நிறைவு!

கேஷுவல் லுக்.. ஈஷா ரெப்பா!

வாத்தி படத்துக்காக ஜி.வி. பிரகாஷுக்கு சிறந்த இசையமைப்பாளர் விருது!

முதல் டெஸ்ட்: ஜிம்பாப்வேவை வீழ்த்தி நியூசிலாந்து அபார வெற்றி!

தேசிய திரைப்பட விருதுகள்! சிறந்த தமிழ்ப்படம் உள்பட 3 விருதுகளுடன் பார்க்கிங் அசத்தல்!

SCROLL FOR NEXT