செய்திகள்

'டான்' படத்துக்கு ராமதாஸ் விமர்சனம் - சிவகார்த்திகேயன் பதில்

பாமக நிறுவனர் ராமதாஸ் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டான் திரைப்படம் குறித்த தனது விமர்சனத்தை ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். 

DIN

பாமக நிறுவனர் ராமதாஸ் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டான் திரைப்படம் குறித்த தனது விமர்சனத்தை ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். 

அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, பிரியங்கா மோகன், சிவாங்கி உள்ளிட்ட பலர் நடித்திருந்த படம் டான். கடந்த மே 13 ஆம் தேதி வெளியான இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இருப்பினும் ரூ.100 கோடிக்கும் அதிகமாக இந்தப் படம் வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. 

தற்போது நெட்ஃபிளிக்ஸில் வெளியான இந்தப் படத்தைப் பார்த்து பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், ''நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த டான் திரைப்படம் பார்த்தேன்.

'பெற்றோரை அவர்கள் இருக்கும்போதே கொண்டாடுங்கள்' என்ற பாடத்தை சொல்லும் அந்தத படம் அனைவராலும் பார்க்கப்பட வேண்டிய ஒன்றாகும்'' என்று குறிப்பிட்டுள்ளார். அதற்கு சிவகார்த்திகேயன் 'நன்றி ஐயா' என பதிலளித்துள்ளார். 

சமீப காலமாக ராமதாஸ் திரைப்படங்கள் குறித்து அடிக்கடி கருத்து பதிடுவதைக் கொண்டுள்ளார். முன்னதாக 'கன்னத்தில் முத்தமிட்டால்', 'அடுத்த சாட்டை', 'மாறா 'உள்ளிட்ட படங்களுக்கு அவர் பாராட்டு தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகாத்மா காந்தி நினைவிடத்தில் சிங்கப்பூர் பிரதமர் அஞ்சலி!

அழகிய லைலா... நிகிலா விமல்!

ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கான தென்னாப்பிரிக்க அணி அறிவிப்பு!

வெளிநாட்டில் சிரித்துக் கொண்டிருந்த மோடி, இந்தியா வந்ததும் அழத் தொடங்கிவிட்டார்! தேஜஸ்வி

இடுகாட்டுத் தொழிலாளர்களுக்கு விமான டிக்கெட்: நடிகருக்கு குவியும் வாழ்த்து!

SCROLL FOR NEXT