செய்திகள்

‘சுழல்’ இணையத் தொடரை பாராட்டும் லோகேஷ் கனகராஜ்

கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவான ‘சுழல்' இணையத் தொடரை காட்சி விருந்தென இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பாராட்டியுள்ளார்.

DIN

கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவான ‘சுழல்' இணையத் தொடரை காட்சி விருந்தென இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பாராட்டியுள்ளார்.  

கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், ராதாகிருஷ்ணன் பார்த்திபன், ஸ்ரீயா ரெட்டி நடிப்பில் பிரம்மா, அனுசரண் இயக்கியுள்ள இணையத் தொடர் - சுழல். (Suzhal: The Vortex). தயாரிப்பு - புஷ்கர், காயத்ரி. 

சுழல் - 240 நாடுகளில் 30 மொழிகளில் ஜூன் 17 முதல் அமேசான் ஓடிடியில் வெளியானது.

சினிமா பிரபலங்கள் படத்தை வெகுவாக பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் இத்தொடரைப் பற்றி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: 

சுழல் தொடர் காட்சி விருந்தாகவும் இணையத் தொடர்களில் தனிமுத்திரையும்  பதித்துள்ளது. புஷ்கர் அண்ணா, காயத்ரி அக்காவுக்கு வாழ்த்துகள். சாம் சி எஸ் இசை அருமை. விசாரணை, ரொமான்ஸ், செண்டிமெண்ட், த்ரில்லர் என தொடர் அருமையாக உள்ளது. சக்கரையாக நடித்த கதிர், ரெஜினாவாக நடித்த ஸ்ரீயா ரெட்டி நல்ல நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருவள்ளூா்: குறைதீா் கூட்டத்தில் 447 மனுக்கள்

8 மாவட்டங்களைச் சோ்ந்த 1 லட்சம் கைத்தறி நெசவாளா்களுக்கு தொழில்நுட்ப உதவி

சிறுவனிடம் பாலியல் தொல்லை: போக்ஸோ சட்டத்தில் கைது

தக்கலை, சுவாமியாா்மடத்தில் நாளை மின்தடை

கருப்புக் கொடியேந்தி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT