செய்திகள்

ஆ! சர்தார் வசூல் இத்தனை கோடியா!

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள சர்தார் திரைப்படம் ரூ. 100 கோடி வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது. 

DIN

பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள சர்தார் திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. தீபாவளியை முன்னிட்டு வெளியானதால் கூடுதலாக இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது.

சர்தார் படத்தில் கார்த்தியுடன் லைலா, ரஜிஷா விஜயன், ராஷி  கண்ணா, யூடியூப் பிரபலம் ரித்விக் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார். 

இந்நிலையில், இந்தப் படம் இதுவரை உலகமெங்கும் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.

படத்தை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் மற்றும் விநியோகித்த ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனங்களுக்கு இப்படம் நல்ல லாபத்தை கொடுத்ததால் சர்தார் படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது.

சமீபத்தில் படத்தின் அபார வசூல் வெற்றியால்  இயக்குநர் பி.எஸ்.மித்ரனுக்கு படத்தின் தயாரிப்பாளர் லக்‌ஷ்மன் லான்சன் காரைப் பரிசாக வழங்கியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாத்தூர் நகராட்சி குப்பை கிடங்கில் தீ! மூச்சுத்திணறலால் மக்கள் அவதி!

காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்! முதல்வர்கள் ஸ்டாலின், பகவந்த் மான் தொடங்கி வைத்தனர்!

25% கூடுதல் வரி நாளை முதல் அமல்..! அறிவிப்பை வெளியிட்ட அமெரிக்கா!

நிதி நெருக்கடி காரணமாக தில்லி மெட்ரோ ரயில் டிக்கெட் விலை உயா்வு

இந்தியா - பாக். சண்டையில் வீழ்த்தப்பட்டது 5 விமானங்கள் அல்ல, 7..! டிரம்ப்

SCROLL FOR NEXT