செய்திகள்

சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ வெளியீட்டு தேதி அறிவிப்பு?

தற்காலிகமாக நிறுத்தப்பட்ட சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் மாவீரன் படப்பிடிப்பு இன்று முதல் மீண்டும் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

DIN


சிவகார்த்திகேயன் நடித்த டான் படம் ரூ. 100 கோடி வசூலை எட்டியதைத் தொடர்ந்து அவர் அடுத்து நடித்து வரும் மாவீரன் படத்தை மடோன் அஸ்வின் இயக்குகிறார். மிஷ்கின், சரிதா, யோகிபாபு போன்றோர் நடிக்கிறார்கள். மடோன் அஸ்வின் இயக்கிய மண்டேலா படத்தில் யோகிபாபு கதாநாயகனாக நடித்தார். இந்தப் படம் தேசிய விருது வாங்கியது. விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பினை பெற்றது குறிப்பிடத்தக்கது. 

இதில் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நாயகியாக நடித்துள்ளார். 40 சதவிகிதம் படப்பிடிப்பு முடிந்த நிலையில் சிவகார்த்திகேயன் தனது படத்தில் இந்த இந்த காட்சிகள் வைக்க வேண்டுமென இயக்குநர் மடோன் அஸ்வினுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதால்  படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆனால் மழைக் காரணமாகவே நிறுத்தப்பட்டதாகவும் இன்று முதல் படப்பிடிப்பு தொடங்கும் எனவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது. 

தற்போது மாவீரன் படம் 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் உலகம் முழுவதும் வெளியாகுமென போஸ்டர் வெளியாகியுள்ளது. ஆனால் இதுவரை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிட்டத்தக்கது. மேலும் ரசிகர்கள் சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாக பலரும் ட்விட் செய்து வருகின்றனர். ட்விட்டரில் மாவீரன் என்ற ஹேஷ்டேக் தற்போது பிரபலமாகி வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிக் பாஸ் 9: வெளியேறும்போது கூட திவ்யாவை புறக்கணித்த சான்ட்ரா!

ஓரிரு நாள்களில் அதிமுக கூட்டணியில் புதிதாக ஒரு கட்சி இணைகிறதா? - இபிஎஸ்

ராகுல் காந்தி நாளை கூடலூர் வருகை!

ரஜினி - 173 புரோமோ இசையமைப்பாளர் இவரா?

அறிவியல் ஆயிரம்: செயற்கை மரபணுவைக் கண்டுபிடித்த ஹர் கோவிந்த் கொரானா!

SCROLL FOR NEXT