செய்திகள்

த்ரிஷா பகிர்ந்த முத்தக் காட்சி: வைரல் விடியோ 

நடிகை த்ரிஷா பகிர்ந்த முத்தக் காட்சி சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 

DIN

பிரபல நடிகை த்ரிஷா நடிப்பில் 2019-ல் பேட்ட, 2021-ல் பரமபதம் விளையாட்டு ஆகிய படங்கள் வெளியாகின. சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் அவரது கதாபாத்திரம் பெரிதும் பேசப்பட்டது. அவரது அழகு கூடிக்கொண்டே போனதாக ரசிகர்கள் பாராட்டினர். 

பொன்னியின் செல்வன் 2, சதுரங்க வேட்டை 2, ராம் (மலையாளம்) ஆகிய படங்கள் அடுத்து வெளிவரவுள்ளன. த்ரிஷா நடிக்கும் புதிய படம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குநர் அருண் வசீகரன் இயக்கத்தில் உருவாகும் தி ரோட் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார் த்ரிஷா.

இந்நிலையில் தனது பேனர் ஒன்றிற்கு குழந்தை ஒன்று முத்தமிடும் விடியோவினை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் நடிகை த்ரிஷா. தற்போது இந்த விடியோ வைரலாகி வருகிறது. 

இந்த விடியோவிற்கு ரசிகர்கள், “இளைய பிராட்டி குந்தவைக்கு யார்தான் முத்தம் கொடுக்க மாட்டார்கள்” என கமெண்ட் செய்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொழிலாளா் வருங்கால வைப்புநிதி விவகாரம்: தற்காலிக தூய்மைப் பணியாளா்கள் பணி புறக்கணிப்பு வாபஸ்

ஜன் சுராஜ் கட்சி ஆட்சிக்கு வந்தால் பிகாரில் மீண்டும் மது விற்பனை: உதய் சிங் அறிவிப்பு

சிரிப்பாலே சாய்த்தாளே... அஞ்சலி தாத்ரி!

கோப்பையிலே என் குடியிருப்பு... செளந்தர்யா ரெட்டி!

மெல்லச் சிரித்தாள்... லாவண்யா!

SCROLL FOR NEXT