செய்திகள்

வெளியானது எஸ்.ஜே. சூர்யாவின் ‘வதந்தி’ டிரைலர்! 

புஷ்கர் காயத்ரி தயாரிப்பில் எஸ்.ஜே. சூர்யா நடிக்கும் ‘வதந்தி’ படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. 

DIN

இயக்குநர் மற்றும் நடிகருமான எஸ்.ஜே. சூர்யா தற்போது முழுநேரம் நடிகராக மட்டுமே நடித்து வருகிறார். கதாநாயகன் மற்றும் முக்கியமான படங்களில் வில்லனாகவும் நடித்து வருகிறார். இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் படத்தில் பிரபல இயக்குநரும் நடிகருமான எஸ்.ஜே. சூர்யா இணைந்துள்ளதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது.

தற்போது புஷ்கர்-காயத்ரி தயாரிப்பில் ‘வதந்தி’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இது இணையத்தொடராக அமேசானில் வெளிவர உள்ளது. இது புஷ்கர் காயத்ரி தயாரிப்பின் 2வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களது முதல் தயாரிப்பில் வெளியான சுழல் நல்ல வரவேற்பினைப் பெற்றதை தொடர்ந்து இந்த தொடர் மீதும் ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

இந்த இணையத் தொடர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என 5 மொழிகளில் டிசம்பர் 2ஆம் தேதி அமேசானில் நேரடியாக வெளியாக உள்ளது. இதன் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.

இந்த தொடரை லீலை, கொலைகாரன் படத்தின் இயக்குநர் ஆண்ட்ரிவ் லூயிஸ் இயக்கியுள்ளார். நடிகை சஞ்சனா, லைலா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இருசக்கர வாகனம் ஓட்டிய சிறுவா்களின் பெற்றோருக்கு ரூ.25,000 அபராதம்!

வெளிமாநிலத்தவருக்கு தமிழகத்தில் வாக்காளா் அட்டை வழங்கக்கூடாது

சம்பட்டிமடை கிராமத்துக்கு சாலை அமைக்காததைக் கண்டித்து போராட்டம் நடத்த கிராம மக்கள் முடிவு

கிராம சபைக் கூட்டத்தை புறக்கணித்து பொதுமக்கள் சாலை மறியல்

முதிய தம்பதியை தாக்கி கொள்ளை: இருவா் கைது

SCROLL FOR NEXT