செய்திகள்

இணையத்தில் வைரலாகும் ‘உச்சிமலை காத்தவராயன்’ பாடல் விடியோ!

நடிகை ஆஷ்னா ஜவேரி, நடிகர் மாகாபா ஆன்ந்த், மிர்ச்சி விஜய் ஆகியோர் நடிப்பில் உருவான ‘உச்சிமலை காத்தவராயன்’ பாடல் விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

DIN

2014இல் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் மும்பையை சேர்ந்த நடிகை ஆஷ்னா ஜவேரி. சமீபத்தில் அவரது கன்னித்தீவு படம் பற்றிய அறிவிப்பு வெளியானது. கடைசியாக 2018இல் அவரது படம் வெளியானது குறிப்பிடத்தக்கது. அடுத்து கலையரசன், ஆனந்தியுடன் இவர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 

தற்போது விஜய் டிவி புகழ் மகாபா ஆனந்த், ஆர்ஜே விஜய் உடன் இவர் நடனமாடிய உச்சிமலை காத்தவராயன்’ பாடல் விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒரே நாளில் 1 மில்லியன் (10 லட்சம்) பார்வையாளர்களை கடந்துள்ளது. 

பி ரெடி பிளிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் பாடலுக்கு இசையமைத்துள்ளார் அனிவீ. நடனம்- சேண்டி மாஸ்டர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

என்னை யாரும் இயக்கவில்லை: செங்கோட்டையன் பேட்டி

நியூயார்க் மேயராக முதல் இந்திய வம்சாவளி தேர்வு! யார் இவர்?

பாமக எம்எல்ஏ அருள் மீது தாக்குதல்! 20 பேர் மீது வழக்கு!

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

SCROLL FOR NEXT