செய்திகள்

நடிகைகள் பார்வதி, நித்யா மேனன் கர்ப்பமா? அவர்கள் பகிர்ந்த புகைப்படத்திற்கான காரணம் என்ன? 

நடிகை பார்வதி மற்றும் நித்யா மேனன் இருவரும் கர்ப்பமாக இருப்பதாக தங்களது சமூக வலைதளங்களில் கர்ப்ப பரிசோதனை புகைப்படத்தினை பகிர்ந்தது வைரலானது. 

DIN

நடிகை பார்வதி மற்றும் நித்யா மேனன் இருவரும் கர்ப்பமாக இருப்பதாக தங்களது சமூக வலைதளங்களில் கர்ப்ப பரிசோதனை புகைப்படத்தினை பகிர்ந்தது வைரலானது. 

பார்வதியின் நடிப்பில் வெளியான ‘புழு’ திரைப்படம் நல்ல வரவேற்பினைப் பெற்றது. அடுத்த பா.ரஞ்சித் இயக்கத்தில் ‘தங்கலான்’ படத்தில் நடித்து வருகிறார். அதே போல் நித்யா மேனன் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் படம் 100 கோடிக்கு மேல் வசூலாகி நல்ல வரவேற்பினைப் பெற்றது. 

இந்நிலையில், பார்வதி திருவோத்து மற்றும் நித்யா மேனன் இருவரும் தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் கர்ப்ப பரிசோதனை தொகுப்பு முடிவுகள் அடங்கிய புகைப்படத்தினை பதிவிட்டனர். இருவருக்குமே திருமணம் நடைபெறாததால் ரசிகர்கள் குழப்பமும் அதிர்ச்சியுமடைந்தனர். சில நண்பர்களும் ரசிகர்களும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவிக்க ஆரம்பித்து விட்டனர். 

இருவரும் கர்ப்பமாக இல்லை. இது புதிய படத்திற்கான விளம்பரம் என்று பின்னர் தெரிவித்தனர். அஞ்சலி மேனன் இயக்கும் புதிய தமிழ் படத்திற்கான விளம்பரமாக இதை செய்துள்ளனர். இந்தப் படத்தில் பார்வதி, நித்யா இருவரும் கர்ப்பிணிப் பெண்களாக நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. படத்தின் பெயர் அறிவிக்கப்படாத நிலையில் இதற்கு ‘வண்டர் வுமன்’ என இருக்கலாம் என தகவல்கள் சமூக வலைதளங்களில் உலவுகின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூர் சம்பவம்: சிபிஐ விசாரணைக்கு ஆஜராக தில்லி புறப்பட்டார் விஜய்

தெலங்கானா: 300 தெரு நாய்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் 9 பேர் மீது வழக்கு

பொங்கல் பண்டிகை: சென்னையில் இருந்து இதுவரை 3.58 லட்சம் போ் பயணம்!

பாராட்டு நிச்சயம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

கிராமப்புற மாணவா்களுக்கான ஆங்கில பேச்சுப் பயிற்சி

SCROLL FOR NEXT