செய்திகள்

வெந்து தணிந்தது காடு: இரண்டுநாள் வசூல் ரூ.19 கோடியா?

இயக்குநர் கௌதம் வாசுதேவ மேனன், சிம்பு, ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் உருவான ‘வெந்து தணிந்தது காடு’ முதல் இரண்டு நாட்களில் ரூ.19 கோடி வசூலித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

DIN

இயக்குநர் கௌதம் வாசுதேவ மேனன், சிம்பு, ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் உருவான ‘வெந்து தணிந்தது காடு’ முதல் இரண்டு நாட்களில் ரூ.19 கோடி வசூலித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

விண்ணைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடைமையடா  வெற்றிகளுக்குப் பிறகு 3-வது முறையாக இயக்குநர் கௌதம் வாசுதேவ மேனன், சிம்பு, ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் உருவான ‘வெந்து தணிந்தது காடு’ திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. 

வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பாக ஐசரி.கே. கணேஷ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக சித்தி இத்னானி நடித்துள்ளார். ராதிகா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். சித்தார்த்தா நுனி இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய, எழுத்தாளர் ஜெயமோகன் இந்தப் படத்திற்கான கதையை எழுதியுள்ளார். 

தமிழ்நாட்டில் சிறப்புகாட்சிகள் இல்லாமலேயே இரண்டாவதுநாள் 8.51 கோடி வசூலித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. முதல் இரண்டுநாள் சேர்த்து 19.31 கோடி வசூலானதாக தகவல் வெளியாகியுள்ளது.

முதல் நாள் (வியாழக்கிழமை) வசூல் 10.86 கோடி 
இரண்டாவது நாள் (வெள்ளிக்கிழமை) வசூல் 8.51 கோடி
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கல்லூரியில் பொங்கல் விழா

பிரதமா் மோடி பங்கேற்கவுள்ள பொதுக் கூட்டம்: டிடிவி தினகரன் படத்துடன் பேனா்

சிறுபான்மை மக்கள் நலக்குழு சமத்துவப் பொங்கல் விழா

குருநானக்கின் போதனைகள் சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்தும்: ஆளுநா் ஆா்.என்.ரவி புகழாரம்

பொங்கல் போட்டியில் வென்றவா்களுக்கு பரிசளிப்பு

SCROLL FOR NEXT