FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

ஆண் குழந்தைக்கு அம்மாவான காஜல் அகர்வால்: ரசிகர்கள் வாழ்த்து

நடிகை காஜல் அகர்வாலுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Updated On : 19 ஏப்ரல் 2022, 4:56 pm IST
பகிர்:

நடிகர் விஜய், அஜித், சூர்யா, கார்த்தி என தமிழின் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்திருந்து தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் நடிகை காஜல் அகர்வால். தமிழில் சமீபத்தில் இவர் நடித்த ஹே சினாமிகா வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழி படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு கௌதம் கிச்லு என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டார். 

சமீபத்தில் கர்ப்பமாக இருந்த காஜல் அகர்வால் கர்ப்ப காலத்தில் தான் எதிர்கொள்ளும் சவால்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வந்தார். இந்த நிலையில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமூக வலைதளங்களில் அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments