மே 6இல் வெளியாகிறது ‘வாய்தா’
நடிகர் நாசர், புதுமுக நடிகர் புகழ் மகேந்திரன் நடித்துள்ள வாய்தா திரைப்படம் மே 6ஆம் தேதி வெளியாவதாக படக்குழு அறிவித்துள்ளது.
நடிகர் நாசர், புதுமுக நடிகர் புகழ் மகேந்திரன் நடித்துள்ள வாய்தா திரைப்படம் மே 6ஆம் தேதி வெளியாவதாக படக்குழு அறிவித்துள்ளது.
தயாரிப்பாளர் கே.வினோத்குமார் தயாரிப்பில் இயக்குநர் மகிவர்மன் இயக்கியுள்ள திரைப்படம் வாய்தா. குறிப்பிட்ட சமூகமொன்றின் அதிகாரப் பிரதிநிதித்துவம், அந்த சமூகத்தின் மீதான ஒடுக்குமுறை குறித்து பேசும் கதைக்களத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் சி.மகேந்திரனின் மகன் புகழ் மகேந்திரன் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
இதையும் படிக்க | கவினின் 'டாடா' பட முதல் பார்வை போஸ்டரை வெளியிட்ட பா.ரஞ்சித்
Advertisement
Advertisement
அவருக்கு இணையாக நடிகை ஜெசிகா நடித்துள்ளார். இதுதவிர பிரபல நடிகர் நாசர், நாடக நடிகர் மு.ராமசாமி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்நிலையில் இந்தத் திரைப்படம் மே 6ஆம் தேதி வெளியாவதாக படக்குழு வியாழக்கிழமை அறிவித்தது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.