முகப்பு
செய்திகள்

விருமன் திரைப்பட டிரைலர் வெளியீடு

இயக்குநர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள விருமன் படத்தின் டிரைலர் புதன்கிழமை வெளியானது.

Updated On : 3 ஆகஸ்ட் 2022, 8:46 pm IST
பகிர்:

இயக்குநர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள விருமன் படத்தின் டிரைலர் புதன்கிழமை வெளியானது.

2டி எண்டர்டெயின்மென்ட் சார்பாக சூர்யா - ஜோதிகா இணைந்து தயாரித்துள்ள விருமன் படத்தில் கார்த்தி நாயகனாக நடித்துள்ளார். கொம்பன் படத்துக்கு பிறகு கார்த்தி மற்றும் இயக்குநர் முத்தையா இணைந்துள்ளதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

இந்நிலையில் மதுரையில் நடைபெற்ற திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு இந்த திரைப்படத்தின் டிரைலர் புதன்கிழமை வெளியிடப்பட்டது.

Advertisement

முன்னதாக யுவன் ஷங்கர் ராஜா இசையில் ஏற்கெனவே கஞ்சா பூ கண்ணால பாடல் வெளியாகி வைரலாகியிருந்தது. 

மதுரை ராஜா முத்தையா அரங்கத்தில் நடைபெற்ற இந்த விழாவில் நடிகர்கள் கார்த்தி, சூர்யா, இயக்குநர்கள் ஷங்கர், பாரதி ராஜா, முத்தையா, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.