மீண்டும் திரையரங்கில் குஷி! எப்போது?
எஸ்.ஜே. சூர்யா இயக்கத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற குஷி திரைப்படம் மீண்டும் திரையரங்கில் வெளியாகிறது.
எஸ்.ஜே. சூர்யா இயக்கத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற குஷி திரைப்படம் மீண்டும் திரையரங்கில் வெளியாகிறது.
கடந்த 2000-ல் நடிகர் விஜய், ஜோதிகா, விஜய்குமார், ஷில்பா செட்டி, மும்தாஜ் நடிப்பில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்ற வெற்றிப் படம் குஷி. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, ஹிந்தி, தெலுங்கி, கன்னட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.
இப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிகர் பவன் கல்யாண், பூமிகா நடித்து 2001-ஆம் ஆண்டு திரையரங்கில் வெளியாகி வசூலை அள்ளியது. இந்த படத்தையும் எஸ்.ஜே.சூர்யா தான் இயக்கினார்.
Advertisement
Advertisement
இந்நிலையில், 21 ஆண்டுகளுக்கு பிறகு புத்தாண்டை முன்னிட்டு வருகின்ற டிசம்பர் 31ஆம் தேதி தெலுங்கு குஷி திரையங்குகளில் ரீரிலீஸ் செய்யப்படவுள்ளது.
இந்த அறிவிப்பு, பவன் கல்யாணின் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.