சர்ச்சை காட்சி! 'பதான்' படத்தால் சிக்கலில் தணிக்கைக்குழு!
ஷாருக் கான் நடிப்பில் உருவாகியுள்ள பதான் படத்தில், இடம் பெற்ற சர்ச்சைக்குரிய பாடலால் தணிக்கைக் குழுவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஷாருக் கான் நடிப்பில் உருவாகியுள்ள 'பதான்' படத்தில், இடம் பெற்ற சர்ச்சைக்குரிய பாடலால் தணிக்கைக் குழுவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தீபிகா படுகோன் காவி நிற உடையை அணிந்து நடனமாடும் காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், சர்ச்சையான காட்சிகளை நீக்குவதற்காக தணிக்கைக் குழு மீண்டும் படத்தை தணிக்கை செய்யவுள்ளது.
பாலிவுட் நடிகர் ஷாருக்கான் - தீபிகா படுகோன் நடிப்பில் உருவாகியுள்ளது பதான் திரைப்படம். இந்த படத்தில் இடம் பெற்றுள்ள ''பேஷாரம் ராங்..'' பாடலில் ஷாருக்கானுடன் காவி உடை அணிந்தவாறு தீபிகா படுகோன் நடனமாடுவதற்கு பாஜக தரப்பில் கடும் எதிர்ப்புகள் எழுந்தன.
Advertisement
Advertisement
ஹிந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் அந்த நடனக் காட்சிகள் இருப்பதால், பாஜக ஆளும் மாநிலங்களில் பதான் படத்தை திரையிட எதிர்ப்புகள் எழுந்தன.
இந்நிலையில், படத்தை தணிக்கைக் குழு மீண்டும் தணிக்கை செய்யவுள்ளது. படைப்புகள் பொதுமக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் இருக்கக்கூடாது என தணிக்கை வாரியத் தலைவர் பிரசூன் ஜோஷி தெரிவித்துள்ளார்.
எனினும் அரசியல் கட்சிகளின் எதிர்ப்புகளைத் தொடர்ந்து 'பதான்' படத்தை மீண்டும் தணிக்கை செய்வதற்கு எதிர்ப்புகளும் எழுந்து வருகின்றன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.