கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த நடிகர் மரணம் - ரசிகர்கள் அதிர்ச்சி
கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த ஹிந்தி நடிகர் திபேஷ் பன் மாரடைப்பால் மரணம் அடைந்த சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த ஹிந்தி நடிகர் திபேஷ் பன் மாரடைப்பால் மரணம் அடைந்த சம்பவம் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹிந்தி தொடர்களில் நகைச்சுவை வேடத்தில் நடித்து ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தவர் திபேஷ் பன். குறிப்பாக இவர் நடித்த பாபிஜி கர் பர் ஹேன் என்ற தொடர் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் மறக்க முடியாத தொடராக இருந்து வருகிறது.
இதையும் படிக்க | தேசிய விருது ஊக்கத்தைத் தருகிறது: நடிகா் சூா்யா
Advertisement
Advertisement
இந்த நிலையில் இவர் சமீபத்தில் மும்பையில் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருந்த திபேஷ் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.
உடனடியாக அவரை அவரது நண்பர்கள் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது திபேஷை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மாரடைப்பால் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். திபேஷின் மறைவு செய்தி சின்னத்திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.