ஹிந்தியில் ரீமேக் ஆகும் ஆரண்ய காண்டம்: இயக்குநர் யார்?
தியாகராஜன் குமாரராஜா முதல்முதலாக இயக்கிய படம் - ஆரண்ய காண்டம். 2011-ல் வெளிவந்தது.
இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா முதல்முதலாக இயக்கிய படம் - ஆரண்ய காண்டம். 2011-ல் வெளிவந்தது. ஜாக்கி ஷெராஃப், ரவி கிருஷ்ணா, குரு சோமசுந்தரம், சம்பத் ராஜ் போன்றோர் நடித்தார்கள். ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அடுத்ததாக 2019-ல் சூப்பர் டீலக்ஸ் படத்தை இயக்கினார்.
இந்நிலையில் ஆரண்ய காண்டம் படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. தயாரிப்பாளர்கள் ரமேஷ் துரானி, அக்ஷய் பூரி ஆகிய இருவரும் இப்படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமையைப் பெற்றுள்ளார்கள். செக்சன் 375 படத்தை இயக்கிய அஜய் பால், ஆரண்ய காண்டம் படத்தின் ஹிந்தி ரீமேக்கை இயக்கவுள்ளார்.
விஜய் சேதுபதி, கத்ரினா கயிஃப் நடிக்கும் மெர்ரி கிறிஸ்துமஸ் ஹிந்தி படத்தையும் ரமேஷ் துரானி தயாரித்து வருகிறார்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.