கே.எஸ். ரவிகுமார் நடித்த கூகுள் குட்டப்பா டிரெய்லர் வெளியானது
ஆண்ட்ராய்ட் குஞ்சப்பன் படம் தமிழில் கூகுள் குட்டப்பா எனப் பெயரிடப்பட்டுள்ளது.
2019-ல் ரதீஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளியான மலையாளப் படமான ஆண்ட்ராய்ட் குஞ்சப்பன் வெர்ஷன் 5.25. ரசிகர்களிடம் அதிக வரவேற்பைப் பெற்றது. சுராஜ், செளபின் போன்றோர் நடித்திருந்தார்கள். இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை பிரபல இயக்குநர் கே.எஸ். ரவிகுமார் பெற்றுள்ளார். கமல் நடித்த தெனாலி படத்துக்குப் பிறகு 21 வருடங்கள் கழித்து அடுத்த படத்தை அவர் தயாரிக்கிறார்.
ஆண்ட்ராய்ட் குஞ்சப்பன் படம் தமிழில் கூகுள் குட்டப்பா எனப் பெயரிடப்பட்டுள்ளது. முதியவர் வேடத்தில் கே.எஸ். ரவிகுமார் நடித்துள்ளார். தர்ஷன், லாஸ்லியா, யோகி பாபு போன்றோரும் நடித்துள்ளார்கள். கே.எஸ். ரவிகுமாரின் உதவி இயக்குநர்களான சபரி மற்றும் சரவணன் கூகுள் குட்டப்பாவை இயக்கியுள்ளார்கள். இசை - ஜிப்ரான். கடந்த வருடம் பிப்ரவரி மாதம் படப்பிடிப்பு தொடங்கியது.
இந்நிலையில் கூகுள் குட்டப்பா படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகியுள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.