’பத்தல..பத்தல’ நீண்ட நாள்களுக்குப் பின் இறங்கி ஆடிய கமல்ஹாசன்
கமல்ஹாசன் நடிப்பில் உருவான விக்ரம் படத்தின் முதல் பாடல் குறித்து இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் புதிய தகவலைப் பகிர்ந்துள்ளார்.
கமல்ஹாசன் நடிப்பில் உருவான விக்ரம் படத்தின் முதல் பாடல் குறித்து இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் புதிய தகவலைப் பகிர்ந்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவான விக்ரம் திரைப்படத்தின் முதல் பாடல் இன்று மாலை வெளியாக உள்ள நிலையில் அதுகுறித்து அப்படத்தின் இசையமைப்பாளர் அனிருத் ‘பத்தல..பத்தல.. நீண்ட நாள்களுக்குப் பின் கமல்ஹாசன் சார் இறங்கி குத்தியிருக்கிறார்’ என படம் பற்றிய புதிய தகவலை பகிர்ந்துள்ளார்.
விக்ரமில் கமல்ஹாசனுடன் விஜய் சேதுபதி, ஃபஹத் ஃபாசில் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
Advertisement
Advertisement
ஜுன் 3 அன்று திரையரங்கில் வெளியாகும் இப்படத்தின் டிரைலர் மற்றும் அனைத்து பாடல்களும் வருகிற மே 15 அன்று வெளியாகவுள்ளன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.