கார்த்தியின் விருமன் பட வெளியீட்டுத் தேதி அறிவிப்பு
ஷங்கரின் இளைய மகளான அதிதி கதாநாயகியாகத் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகிறார்.
இயக்குநர் ஷங்கரின் இளைய மகளான அதிதி கதாநாயகியாகத் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகிறார். சூர்யா - ஜோதிகாவின் 2டி நிறுவனம் தயாரிக்கும் விருமன் என்கிற படத்தில் அறிமுகமாகிறார் அதிதி. இப்படத்தில் கதாநாயகனாக கார்த்தி நடிக்கிறார். இயக்கம் - முத்தையா. இசை - யுவன் சங்கர் ராஜா.
விருமன் படத்தின் வெளியீட்டுத் தேதி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 31-ம் தேதி, விநாயகர் சதுர்த்தி அன்று, வீரநடை போட்டு வருகிறான் விருமன் என 2டி நிறுவனம் இன்று அறிவித்துள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.