முகப்பு
செய்திகள்

விஜய் சேதுபதி நடித்த மாமனிதன்: புதிய வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

பல காரணங்களால் இதன் வெளியீட்டு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் புதிய வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:19 AM
பகிர்:

யுவன் சங்கர் ராஜாவின் தயாரிப்பில் விஜய் சேதுபதி நடித்துள்ள மாமனிதன் படத்தை இயக்கியுள்ளார் சீனு ராமசாமி. தென்மேற்குப் பருவக்காற்று, தர்மதுரை, இடம் பொருள் ஏவல் என சீனு ராமசாமி இயக்கிய மூன்று படங்களில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். இருவரும் இணைந்துள்ள நான்காவது படமிது.

இளையராஜா - யுவன் சங்கர் ராஜா ஆகிய இருவரும் இணைந்து இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்கள். இந்தப் படத்தின் படப்பிடிப்பு 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதமே முடிவடைந்துவிட்டது. தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களின் திரையரங்கு உரிமையை ஸ்டூடியோ 9 சுரேஷ் பெற்றுள்ளது.

பல காரணங்களால் இதன் வெளியீட்டு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் புதிய வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 23 அன்று மாமனிதன் படம் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.