கதிர், நரேன் நடித்த ‘யூகி’: டீசர் வெளியானது!
நடிகர் கதிர், நரேன், ஆனந்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘யூகி’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
நடிகர் கதிர், நரேன், ஆனந்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘யூகி’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
மதயானைக் கூட்டம் படத்தில் அறிமுகமானவர் நடிகர் கதிர். தேர்ந்தெடுத்த கதைகளில் மட்டுமே நடிப்பவர். இவர் நடிப்பில் உருவான ‘சுழல்’ திரைப்படம் அமேசானில் வெளியாகி நல்ல வரவேற்பினைப் பெற்றது. தற்போது பாக்யராஜ் கதையில் ஜாக் ஹாரிஸ் இயக்கத்தில் கதிர், நரேன், நட்டி நடராஜ், ஆனந்தி, பவித்ரா லக்ஷ்மி உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘யூகி’. இசை - ரன்ஜின் ராஜ். பின்னணி இசை- டான் வின்செண்ட்.
இந்தப் படம் திரையரங்குகளில் நவம்பர் மாதம் 18ஆம் நாள் வெளியாகுமென அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.