வருங்கால கணவரின் முதல் திருமணத்தில் பங்கேற்ற ஹன்சிகா...
நடிகை ஹன்சிகா மோத்வானி தன் வருங்கால கணவரின் முதல் திருமணத்தில் பங்கேற்ற விடியோ வைரலாகி வருகிறது.
நடிகை ஹன்சிகா மோத்வானி தன் வருங்கால கணவரின் முதல் திருமணத்தில் பங்கேற்ற விடியோ வைரலாகி வருகிறது.
நடிகை ஹன்சிகா தமிழில் ‘எங்கேயும் காதல்’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தின் மூலம் பிரபலமடைந்தார். அதன்பின் ‘பிரியாணி’, ’சிங்கம் 2’ உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
தற்போது, தமிழ் மற்றும் தெலுங்கில் சில படங்களில் நடித்து வருகிறார்.
Advertisement
Advertisement
அவர் தொழிலதிபர் சோகேல் என்பவரை டிசம்பர் 3 ஆம் தேதி திருமணம் செய்ய உள்ளதாக சமீபத்தில் அறிவித்தார்.
இதையும் படிக்க: மீண்டும் பாலிவுட் செல்லும் ஐஸ்வர்யா ராஜேஷ்
இந்நிலையில், சோகேல் ஏற்கனவே கடந்த 2016 ஆம் ஆண்டு ஹன்சிகாவின் நெருங்கிய தோழியான ரிங்கி என்பவரை திருமணம் செய்துள்ளார். அந்நிகழ்வில் ஹன்சிகாவும் பங்கேற்றுள்ளார். இதுகுறித்தான, விடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
சோகேல் தன் மனைவியை விவாகரத்து செய்ததைத் தொடர்ந்து, ஹன்சிகாவும் சோகேலும் ஏற்றுமதி தொழிலில் பங்குதாரர்களாக செயல்பட்டு வந்துள்ளனர். நண்பர்களாக இருந்தவர்கள் தற்போது திருமணம் செய்ய உள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.