முகப்பு
செய்திகள்

சமந்தாவின் சாகுந்தலம்: ரிலீஸ் தேதி மாற்றம்! 

நடிகை சமந்தா நடித்துள்ள சாகுந்தலம் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது. 

Updated On : 1 அக்டோபர் 2022, 5:23 pm IST
பகிர்:

நடிகை சமந்தா நடித்துள்ள சாகுந்தலம் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது. 

தமிழ் மற்றும் தெலங்கு திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வரும் நடிகை சமந்தா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் சாகுந்தலம்.

சாகுந்தலம் திரைப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் ரிலீஸ் செய்யப்படுகிறது. படத்தின் கதை மற்றும் இயக்கத்தை ருத்ரமாதேவி பட புகழ் குணசேகரன் ஏற்றுள்ளார்.

Advertisement

Advertisement

மகாகவி காளிதாசர் எழுதிய புராணகதையான சாகுந்தலம் என்ற கதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டு வரும் சாகுந்தலம் படத்தில் சாகுந்தலையாக நடிகை சமந்தாவும், துஷ்யந்த் கதாப்பாத்திரத்தில் தேவ் மோகனும் நடித்துள்ளனர். 

மிகவும் புகழ்பெற்ற சாகுந்தலை புராணக் கதையில் மோகன் பாபு, கௌதமி, அதிதி பாலன், அனன்யா நகல்லா, பிரகாஷ் ராஜ், மதுபாலா, உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இவர்களுடன் சாகுந்தலா - துஷ்யந்த் மகன் மற்றும் இளவரசர் பரதன் கதாப்பாத்திரத்தை அல்லு அர்ஜூன் மகள் அல்லு அர்ஹா ஏற்றுள்ளார்.

இந்தப் படம் வரும் நவம்பர் 4ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என்று அறிவித்திருந்தனர். ஆனால் தற்போது படத்தினை 3டியில் வெளியிட உள்ளதால் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது. விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படுமென படக்குழு தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments