விஜய்யுடன் இணையும் அருண்விஜய்
நடிகர் அருண் விஜய்யின் அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பு புதன்கிழமை வெளியானது.
நடிகர் அருண் விஜய்யின் அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பு புதன்கிழமை வெளியானது.
யானை, சினம் திரைப்படத்தின் வெற்றிகளைத் தொடர்ந்து நடிகர் அருண்விஜய் நடிக்கும் திரைப்படம் அச்சம் என்பது இல்லையே.
இயக்குநர் விஜய் இயக்கும் இந்தத் திரைப்படத்தில் அருண்விஜய்க்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடிக்கிறார். ஆக்ஷன் வகையிலாக உருவாகும் இந்தத் திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.
Advertisement
இதையும் படிக்க | இளைஞர்களைக் கவரும் ‘லவ் டுடே’ டிரைலர்
இந்நிலையில் இந்த திரைப்படத்திற்கான அறிவிப்பை படக்குழுவினர் புதன்கிழமை வெளியிட்டனர். மேலும் லண்டனில் படமாக்கப்பட்டுள்ள இந்தத் திரைப்படத்தின் காட்சிகளையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.