முகப்பு
செய்திகள்

கிளாமர் ரூட்டுக்கு மாறிய நடிகை கீர்த்தி சுரேஷ் - ஃபயர் விடும் ரசிகர்கள்

நடிகை கீர்த்தி சுரேஷின் கிளாமர் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் டிரெண்டிங்கில் இருக்கின்றன. 

Updated On : 11 அக்டோபர் 2022, 11:59 am IST
பகிர்:

நடிகை கீர்த்தி சுரேஷின் கிளாமர் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் டிரெண்டிங்கில் இருக்கின்றன. 

தமிழில் விஜய், சூர்யா, சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக கமர்ஷியல் படங்களில் நடித்துவந்த கீர்த்தி சுரேஷுக்கு மறைந்த நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாறான மகாநடி திருப்புமுனையாக அமைந்தது.

மகாநடி படத்தில் சாவித்ரியாகவே வாழ்ந்தார் என்று சொல்லும் அளவுக்கு மிகவும் தத்ரூபமாக அந்த வேடத்தை அவர் கையாண்டிருந்தார். அதற்கு பரிசாக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை அவர் பெற்றார். 

Advertisement

இதனையடுத்து கமர்ஷியல் படங்களுடன் தனி கதாநயாகியாகவும் படங்களில் அசத்தி வருகிறார். அப்படி அவர் தனி கதாநாயகியாக நடித்த மிஸ் இந்தியா, பென்குயின், சாணிக்காயிதம் போன்ற படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. 

இதன் காரணமாக கமர்ஷியல் படங்களில் மட்டுமே மீண்டும் கவனம் செலுத்த முடிவுசெய்துள்ளதாக தெரிகிறது. அதன் ஒரு பகுதியாக தனது கிளாமர் புகைப்படங்களை அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனையடுத்து அவரது புகைப்படத்துக்கு ரசிகர்கள் ஃபயர் விட்டுவருகின்றனர். 

தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக மாமன்னன், தெலுங்கில் நானிக்கு ஜோடியாக தசரா போன்ற படங்களில் நடித்துவருகிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.