முகப்பு
செய்திகள்

ஆண் குழந்தைக்கு அம்மாவான சௌந்தர்யா ரஜினிகாந்த் - பெயர் என்ன தெரியுமா ?

நடிகர் ரஜினிகாந்த்தின் மகளும்  பிரபல தயாரிப்பாளர், இயக்குநருமாகிய சௌந்தர்யா ரஜினிகாந்த்துக்கு ஆண் குழந்தைக்கு பிறந்துள்ள நிலையில் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். 

Updated On : 12 செப்டம்பர் 2022, 10:54 am IST
பகிர்:

நடிகர் ரஜினிகாந்த்தின் மகளும்  பிரபல தயாரிப்பாளர், இயக்குநருமாகிய சௌந்தர்யா ரஜினிகாந்த்துக்கு ஆண் குழந்தைக்கு பிறந்துள்ள நிலையில் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். 

நடிகர் ரஜினிகாந்த்தின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த். இவர் கருத்து வேறுபாடு காரணமாக முதல் கணவருடன் விவாகரத்து பெற்ற நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு விசாகன் என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். முதல் திருமணத்தின் போது அவருக்கு வேத் என்ற மகன் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் சௌந்தர்யா ரஜினிகாந்த்துக்கு தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இதனையடுத்து அவருக்கு பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். 

Advertisement

Advertisement

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் சௌந்தர்யா அறிவித்துள்ளதாவது, கடவுளின் கருணையாலும், எங்களது பெற்றோர்களின் ஆசியாலும் எனக்கு செப்டம்பர் 11 அன்று ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு வீர் ரஜினிகாந்த் வணங்காமுடி எனப் பெயரிட்டுள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளார். 

தனது அப்பாவின் நினைவாக  சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது குழந்தைக்கு வீர்  ரஜினிகாந்த் வணங்காமுடி என பெயரிட்டிருப்பது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கோவா உள்ளிட்ட படங்களை தயாரித்திருந்த சௌந்தர்யா, கோச்சடையான், வேலையில்லா பட்டதாரி 2 ஆகிய படங்களை இயக்கியுள்ளார். மேலும் கிராஃபிக் டிசைனராக சில படங்களில் பணிபுரிந்துள்ளார். தற்போது பொன்னியின் செல்வன் நாவலை இணையத் தொடராக இயக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகிறார். இதற்கு இளையராஜா இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.