மிக்ஜம் பாதிப்பு: ஹரிஷ் கல்யாண் ரூ.1 லட்சம் நிதியுதவி!
சென்னையில் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளுக்காக நடிகர் ஹரிஷ் கல்யாண் ரூ.1 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.
2018-ல் வெளியான பியார் பிரேமா காதல் படத்தில் கதாநாயகனாக நடித்து பிரபலமானவர் ஹரிஷ் கல்யாண். இதன்பிறகு, பல படங்களில் கதாநாயகனாக நடித்து ஏராளமான ரசிகர்களைப் பெற்றார்.
சமீபத்தில் தோனி தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான ‘எல்ஜிஎம்’ (லெட்ஸ் கெட் மேரிட்) திரைப்படம் கலவையான விமரிசனங்களைப் பெற்றது.
இதையும் படிக்க: ‘தவறான நிர்வாகமே காரணம்..’: சந்தோஷ் நாராயணன்
Advertisement
Advertisement
இதைத் தொடர்ந்து, ஹரிஷ் கல்யாண் நடித்த படம் 'பார்க்கிங்'. நல்ல வரவேற்பைப் பெற்ற இப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில், சென்னையில் மிக்ஜம் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளுக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 லட்சத்தை வழங்கியுள்ளார் ஹரிஷ் கல்யாண்!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.