முகப்பு
செய்திகள்

ஜப்பான் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ஜப்பான் திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 6 டிசம்பர், 2023 at 1:43 PM
பகிர்:

ஜப்பான் திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜிப்ஸி படத்துக்குப் பிறகு ராஜுமுருகன் இயக்கிய திரைப்படம் ‘ஜப்பான்’. இதில் கார்த்தி நாயகனாகவும், அனு இமானுவேல் நாயகியாகவும் நடித்துள்ளனர். 

மேலும் தெலுங்கு நடிகர் சுனில், இயக்குநர் விஜய் மில்டன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Advertisement

ஜப்பான் திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த நவம்பர் 10-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகி கலவையான விமரிசனங்களைப் பெற்றது.

ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரித்த இந்தப் படத்தை ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த நிலையில், ஜப்பான் திரைப்படம் வரும் டிச. 11 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.