அகோரி படத்தின் நாயகனாக ராஜா ராணி தொடர் பிரபலம்!
அகோரி படத்தின் நாயகனாக ராஜா ராணி தொடர் பிரபலம் சித்து நடித்துள்ளார்.
அகோரி படத்தின் நாயகனாக ராஜா ராணி தொடர் பிரபலம் சித்து நடித்துள்ளார்.
சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் சித்து. இவர் திருமணம், ராஜா ராணி உள்ளிட்ட தொடர்களில் நடித்துள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் இவர் நடித்த ராஜா ராணி தொடர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இத்தொடரில் நடித்ததன் மூலம் தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை இவர் உருவாக்கினார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், நடிகர் சித்து தமிழ் சினிமாவில் நுழைந்துள்ளார். இவர் அகோரி எனப் பெயரிடப்பட்டுள்ள தமிழ் படத்தில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக ஸ்ருதி ராமகிருஷ்ணன் நடித்திருக்கிறார்.
இப்படத்தை டிஎஸ் ராஜ்குமார் இயக்கியுள்ளார். மோஷன் பிலிம் பிக்சர்ஸ் சார்பில் சுரேஷ் கே. மேனன் இப்படத்தை தயாரித்துள்ளார்.
இதையும் படிக்க: ரஜினி - 170 படத்தின் பெயர் இதுவா?
அகோரி படத்துக்கு யூ / ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இப்படம் வரும் டிச. 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.