நடிகை அதிதி ராவின் காதலர் தின பதிவிற்கு சித்தார்த்தின் கமெண்ட் என்ன தெரியுமா?
நடிகை அதிதி ராவ் ஹைதரியின் காதலர் தின பதிவிற்கு நடிகர் சித்தார்த் கமெண்ட் செய்துள்ளார்.
நடிகர் சித்தார்த் இயக்குநர் மணிரத்னம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். பின்னர் ஷங்கர் இயக்கத்தில் கதாநாயகனாக நடித்தார். 2019இல் அவரது அருவம் படம் வெளியானது.தெலுங்கில் 2021இல் மஹாசமுத்திரம் படம் வெளியானது. இந்தப் படத்தில் நடிகை அதிதி ராவ் ஹைதரி உடன் நடித்திருந்தார்.
இதையும் படிக்க: ‘உங்களால்தான் இன்ஸ்டாகிராம் பயன்படுத்துகிறேன்’ - நடிகையின் புகைப்படத்திற்கு ரசிகர் கமெண்ட்!
அதிதி ராவ் ஹைதரி தமிழில் காற்று வெளியிடை, செக்க சிவந்த வானம், ஹே சினாமிகா போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர். அவரது பிறந்தநாளுக்கு ரசிகர்களும் பலர் நடிகர் நடிகைகளும் வாழ்த்து தெரிவித்தனர். சித்தார்த் கூறிய வாழ்த்து செய்தி மட்டும் சமூக வலைதளங்களில் வைரலானது.
இதையும் படிக்க: காதலர் தினத்தன்று காதலை உறுதிப்படுத்திய ’விக்ரம்’ பட நடிகர்!
சித்தார்த்துக்கு பல நடிகைகளுடன் காதல் இருப்பதாக செய்திகள் வெளியாகி இருந்தாலும் தற்போது அதிதி ராவுடன் காதல் இருப்பதாக அவரது இன்ஸ்டாகிராம் பதிவு சமூக வலைதளங்களில் பேசுபொருளானது. அந்த பதிவில் சித்தார்த், “இதய ராணிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்! உங்களது சிறிய, பெரிய அனைத்து விதமான கனவுகளுக்குமாக கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன்” என எழுதி இருவரும் ஒன்றாக எடுத்த புகைப்படத்தினை பதிவிட்டு இருந்தார்.
இதனால் இருவரும் காதலிக்கிறார்களோ என சமூகவலைதளத்தில் கிசுகிசுக்கப்பட்டது. தற்போது காதலர்தினத்திற்கு அதிதி ராவ் பழம்பெரு நடிகர் தர்மேந்திர டியோலுடம் ரோஜா பூவை தரும் புகைப்படத்தினை பதிவிட்டு, “மிக மிக அழகானவர். எதிர்பார்க்காத காதலர் தினம்” என தலைப்பிட்டுள்ளார். இந்தப் பதிவிற்கு நடிகர் சித்தார்த ஹார்டினை கமெண்ட்டாக பதிவிட்டுள்ளார்.
மேலும் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் த்ரிஷா சித்தார்த் நடித்த படத்தினை காதலர் தின சிறப்பாக பகிர்ந்துள்ளார். இதனால் ரசிகர்கள் இருவரும் காதலிப்பது உறுதி என்பது போல கருத்து தெரிவித்து வருகின்றனர்.