செய்திகள்

மீண்டும் நகைச்சுவை நடிகராகும் சந்தானம்!

‘அரண்மனை 4’ திரைப்படத்தில் காமெடியனாக நடிக்க உள்ளார் சந்தானம். 

DIN

நாயகனாக சந்தானம் நல்ல கதைகளைத் தேர்வு செய்து நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’ கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ஆனால் வசூல் ரீதியாக பெரிதாக லாபமில்லை.  அதற்கு முன் வெளியான ‘சபாபதி’ படமும் சரியாக கைக்கொடுக்கவில்லை.

இதனால், அவர் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற நகைச்சுவை பேய் படமான ‘தில்லுக்கு துட்டு’ படம்போல் மீண்டும் ஒரு பேய் படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை பிரேம் ஆனந்த் இயக்கிவருகிறார். 

இயக்குநர் சுந்தர் சியின் இயக்கத்தில் அரண்மனை திரைப்படம் 2014இல் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது. பேய்ப் படங்களுக்கென்று தனியான ரசிகர்கர்கள் இருக்கிறார்கள்.

இந்நிலையில், அரண்மனை 4 குறித்து சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது. இதில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. லைகா தயாரிப்பதாகவும் தகவல் கசிந்திருந்த வேலையில் நேற்று (ஜன.21) சந்தானத்தின் பிறந்தநாளில் சுந்தர் சி, விஜய் சேதுபதி ஆகியோர் பங்கேற்றனர். இதனால் இந்தப் படத்தில் சந்தானம் நடிப்பது உறுதியாகியுள்ளது. 

ஏற்கனவே, ஏகே 62 படத்தில் அஜித்துடன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியானது. இதனால் சந்தானம் இனி ஹீரோவாக மட்டும் நடிக்க போவதில்லை. மீண்டும் காமெடியன் அல்லது குணச்சித்திர வேடங்களில் தொடர்ந்து நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எதிலும் வெற்றி இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பூந்தமல்லி - சுங்குவாா்சத்திரம் அரசுப் பேருந்து மப்பேடு வரை நீட்டிப்பு

முதல்வரின் தாயுமானவா் திட்டம்: திருவள்ளூா் மாவட்டத்தில் இன்று தொடக்கம்

கூட்டுறவு சங்க உதவியாளா் பணித் தோ்வு: நுழைவுச் சீட்டு வெளியீடு!

சென்னை மாநகராட்சி அரையாண்டு வரி வருவாய் ரூ.1,002 கோடி!

SCROLL FOR NEXT