செய்திகள்

‘தளபதி 67’ எல்சியூ உறுதி: விக்ரம் பட நடிகர் சுவாரசிய தகவல்!

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 67 படம் பற்றி பகத் பாசில் கூறியது வைரலாகி வருகிறது. 

DIN

விக்ரம் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக தளபதி 67 படத்தினை இயக்குகிறார். 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்க உள்ளார்.

லோகேஷ் சினிமாடிக் யூனிவர்ஸில் தளபதி 67 படம் இருக்கும் என நடிகர் நரேன் கூறியதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகியதும் குறிப்பிடத்தக்கது. ஹிந்தி நடிகர் சஞ்சய் தத் இந்தப்படத்தில் நடிப்பதாகவும் இதுதான் விஜய்யின் முதல் பான் இந்தியப் படமாக வெளியாக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. இயக்குநர் மிஷ்கின் விஜய்யுடன் சண்டைக் காட்சிகளில் நடித்துள்ளதை பகிர்ந்திருந்தார். 

இந்நிலையில், விக்ரம் படத்தில் நடித்த பகத் பாசில் தளபதி 67 படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நடிகர் ஃபகத் கேரளாவில் தங்கம் படப்புரமோஷனில் பங்கேற்றபோது தளபதி 67இல் நீங்கள் நடிக்க போகிறீர்களா எனக் கேட்டதற்கு, “தளபதி 67 லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸில் வருவதால் நான் நடிக்க வாய்ப்பு இருக்கிறது. இப்போதைக்கு எல்லாவற்றையும் சொல்ல முடியாது. முறையான அறிவிப்புகளை படக்குழு அறிவிக்கும். இப்போது இங்கு வந்திருக்கும் படத்தினைப் பற்றி பேசுவோம்” எனக் கூறியுள்ளார். 

இதனால் லோகேஷ் சினிமாடிக் யூனிவர்ஸ் எனப்படும் எல்சியூ உறுதியாகி உள்ளதாக இணையத்தில் இந்த விடியோ வைரலாகி வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிங்கப்பூர் பெண்ணிடம் ரூ. 1.9 கோடி மோசடி செய்த இந்திய வம்சாவளிக்கு 23 மாதங்கள் சிறை!

வெடிகுண்டு மிரட்டல்: அம்பாலா நீதிமன்ற வளாகத்தில் சோதனை

வார பலன்கள் - மீனம்

வார பலன்கள் - கும்பம்

மின் இணைப்பு வழங்க லஞ்சம்: மின்வாரிய அதிகாரி கைது!

SCROLL FOR NEXT