முகப்பு
செய்திகள்

4 வருஷங்களாக காத்திருக்கிறேன்: மாளவிகா 

நடிகை மாளவிகா மோகனன் நான்கு வருஷங்களாக இவரது படத்தை திரையில் காண ஆவலாக உள்ளதாக கூறியுள்ளார். 

Updated On : 24 ஜனவரி, 2023 at 4:39 PM
பகிர்:

தமிழில் நடிகர் ரஜினிகாந்த்தின் பேட்ட படத்தின் மூலம் நடிகையாக  அறிமுகமானவர் மாளவிகா மோகனன். தொடர்ந்து நடிகர் விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார். திரையரங்குகளில் வெளியான மாஸ்டர் பெரும் வெற்றிபெற்றது. தற்போது பா. ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார். 

ஷாருக் கான், தீபிகா, ஜான் ஆப்ரஹாம் நடிப்பில் உருவாகியுள்ள படம் - பதான். சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ளார். இசை - விஷால் & ஷேகர். 2018-ல் ஷாருக் கான் நடித்த ஜீரோ படம் வெளியானது. அதன்பிறகு ஷாருக் கான் கதாநாயகனாக நடித்து வெளியாகவுள்ள படம் - பதான். 

இப்படத்தின் முதல் பாடலாக பேஷரம் ரங் பாடல் வெளியாகி சர்ச்சைகளை ஏற்படுத்தியது. யூடியூப் தளத்தில் அப்பாடல் 190 மில்லியன் பார்வைகளை எட்டியுள்ளது.

Advertisement

பதான் படம் 2023 ஜனவரி 25 அன்று ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. பதான் படத்தின் தமிழ் டிரெய்லரை நடிகர் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டதும் குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் நடிகை மாளவிகாவிடம் பதான் படம் பற்றி கேள்வி கேட்டபோது, “நான் ஷாருக்கின் மிகப்பெரிய ரசிகை. அவரை திரையில் பார்த்து 4 வருஷங்கள் ஆகிறது. அவரது ரசிகர்கள் போலவே நானும் மிகுந்த ஆவலாக காத்திருக்கிறேன்” எனக் கூறியுள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.