ஜவான் டிரைலரை வெளியிடும் நடிகர் விஜய்?: படக்குழு கூறிய அப்டேட் என்ன?
அட்லி இயக்கத்தில் உருவாகியுள்ள ஜவான் படத்தின் டிரைலரை நடிகர் விஜய் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழில் விஜய்யை வைத்து பிகில், மெர்சல், தெறி என்று மூன்று சூப்பர் ஹிட் படங்களைத் தந்த அட்லி, ஷாருக்கானின் ஜவான் படத்தின் மூலம் ஹிந்தியில் இயக்குநராக அறிமுகமாகிறார்.
இதையும் படிக்க: அமைதியான இடம், அமைதியான மனம்: 10 இலட்சம் லைக்குகளை பெற்றுள்ள சாய் பல்லவியின் புதிய புகைப்படங்கள்!
இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்படம் செப்.7 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் இதன் ஓடிடி, இசை மற்றும் திரையரங்க வெளியீட்டு உரிமம் ஆகியவை ரூ.400 கோடிக்கும் மேல் விற்கப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தது. இதன் காரணமாக, இந்தாண்டின் மிகப்பெரிய படமாக ஜவான் உருவெடுத்துள்ளது.
Advertisement
இதையும் படிக்க: நடிகர் டோவினோ தாமஸ் படத்தில் த்ரிஷா: அதிகாரபூர்வ அறிவிப்பு!
சமீபத்தில் இப்படத்தின் இசை உரிமத்தை டீ - சீரியஸ் நிறுவனம் ரூ.36 கோடிக்கு வாங்கியுள்ளதாகவும் ஜவான் தமிழக வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்நிலையில், ரெட் சில்லிஸ் எண்டர்டெயன்மெண்ட் படத்தின் டிரைலர் விரைவில் அறிவிக்கப்படுமென கூறியுள்ளது. நடிகர் விஜய் அட்லிக்கு குடும்ப நண்பராகவும் மாறி வருகிறார். அட்லியின் அனைத்து விழாக்களுக்கும் நடிகர் விஜய் கலந்து கொள்வார். அதனால், டிரைலரை நடிகர் விஜய் வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.