முகப்பு
செய்திகள்

முதல்படம் வெளியாகும் முன்பே 2வது படம்: ராட்சசன் உதவி இயக்குநரின் சைக்கோ த்ரில்லர்! 

நடிகர் விதார்த்தின் நடிப்பில் உருவாகவுள்ள புதிய திரைப்படத்தினை இயக்குகிறார் ராட்சசன் பட உதவி இயக்குநர் சாஜிசலீம்.     

Updated On : 27 ஜூன், 2023 at 3:02 PM
பகிர்:
Updated On : 2 பிப்ரவரி, 2024 at 5:17 PM

ராட்சசன் திரைப்படம் தமிழில் நல்ல வரவேற்பினை பெற்றது. இந்தப் படத்தினை இயக்கிய ராம் குமாரின் உதவி இயக்குநர் சாஜிசலீம் தற்போது நடிகர் விதார்த்துடன் இணைந்துள்ளார். சாஜிசலீம் இதற்குமுன் ‘விடியும் வரை  காத்திரு’ படத்தினை இயக்கியுள்ளார். இந்தப்படம் வெளியாகும் முன்பே இரண்டாவது படத்தினை (லாந்தர்) ஆரம்பித்துள்ளார். இதில் ஸ்வேதா கதாநாயகியாக நடித்துள்ளார். 

மைனா படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் விதார்த். சில தோல்வி படங்களுக்குப் பிறகு கதையில் கவனம் செலுத்தி முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க துவங்கியுள்ளார். கிடாயின் கருணை மனு, குரங்கு பொம்மை போன்ற படங்கள் நல்ல வரவேற்பைனைப் பெற்றது. ஹிப் ஹாப் ஆதியின் அன்பறிவு படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.

படத்திற்கு லாந்தர் எனப் பெயரிடப்பட்டுள்ளது. சந்தோஷ் நாராயணனின் அசோஸியேட் பிரவீன் இசையமைக்க உள்ளார். 

Advertisement

கதையின் மீது நம்பிக்கை வைத்து தயாரிப்பாளர் பத்ரி முதல்படம் வெளியாகமாலே இந்தப்படம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது என இயக்குநர் சஜிசலீம் நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.  படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.