எல்ஜிஎம் படத்தின் வெளியீடு எப்போது?
எல்ஜிஎம் படத்தின் வெளியீடு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
எல்ஜிஎம் படத்தின் வெளியீடு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தோனியும் அவருடைய மனைவி சாக்ஷி சிங் தோனியும் இணைந்து தோனி என்டர்டெய்ன்மெண்ட் என்கிற படத்தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி உள்ளார்கள். ரோர் ஆஃப் தி லயன் என்கிற சிஎஸ்கே பற்றிய ஆவணப்படத்தையும் வுமன்ஸ் டே அவுட் என்கிற குறும்படத்தையும் தயாரித்துள்ளார்கள்.
சிஎஸ்கே அணியின் கேப்டனாக உள்ள தோனி மீது தமிழ் ரசிகர்கள் அதிக அளவிலான அன்பைச் செலுத்தி வருகிறார்கள். இதற்கு நன்றி செலுத்தும் விதமாக தோனி என்டர்டெய்ன்மெண்ட் தயாரிக்கும் முதல் படத்தைத் தமிழில் தயாரிக்க தோனியும், சாக்ஷியும் முடிவு செய்திருந்தனர் .
Advertisement
அதன்படி, ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் ‘எல்ஜிஎம்’(லெட்ஸ் கெட் மேரிட்) என்கிற படத்தின் அறிவிப்பு வெளியானது. தோனி தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண், இவனா, நதியா, வினோதினி, யோகி பாபு போன்றோர் நடித்துள்ளனர். முன்னதாக, இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இதையும் படிக்க: விஜய் ஆண்டனியின் கொலை: வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
இந்நிலையில், எல்ஜிஎம் திரைப்படம் ஜூலை 28 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இசை வெளியீட்டு விழா விரைவில் நடத்தவுள்ளதாக படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.