செய்திகள்

ரஜினி 171 படத்தில் சிவகார்த்திகேயன்? 

நடிகர் ரஜினியின் 171வது படத்தில் சிவகார்த்திகேயன் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

DIN

ஜெயிலர் பட வெற்றியைத் தொடர்ந்து தற்போது ரஜினிகாந்த்தின் 171வது படத்திலும் சன் பிக்சர்ஸ் மீண்டும் இணைகிறது. இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க அனிருத் இசையமைக்கிறார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் சமீபத்தில் வெளியிட்டிருந்தது. 

இயக்குநர் லோகேஷ் தற்போது விஜய்யின் லியோ படத்தினை முடித்துள்ளார். இந்தப்படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது. தற்போது லோகேஷ் கனகராஜ் ‘தலைவர் 171’ படத்திற்கான திரைக்கதை வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். 

இப்படத்தின் முக்கிய வில்லனாக நடிக்க நடிகர் ராகவா லாரன்ஸ் தேர்ந்தெடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. காரணம், ரஜினியுடன் இணைந்து நடிக்க ராகவா லாரன்ஸ் விருப்பம் தெரிவித்து வருவதாகக் கூறப்படுகிறது. 

இந்நிலையில், முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் இணைந்துள்ளதாக சமூக வலைதளங்களில் தலைவர் 171 , சிவகார்த்திகேயன் ஆகிய ஹேஷ்டேக்குகள் டிரெண்டாகி வருகின்றன.

நடிகர் சிவகார்த்திகேயனும் ரஜினி ரசிகர். “ரஜினி சார் எப்போது கூப்பிட்டாலும் நான் நடிக்க தயார்” என சிவகார்த்திகேயன் பல மேடைகளில் கூறியுள்ளார். அதிகாரபூர்வ அறிவிப்புகள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

பொங்கலுக்கு சிவகார்த்திகேயனின் அயலான் வெளியாக உள்ளது.  நடிகர் ரஜினி தற்போது 170வது படத்திலும் சிவகார்த்திகேயன் தனது 21வது படத்திலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்கு வங்கியை அதிகரிக்க பாஜக தில்லுமுல்லு: அமைச்சா் துரைமுருகன்

இசையே முக்கியம்...

விவசாயம் சார்ந்த கதை

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.20.70 லட்சம் மோசடி

பேல் பூரி

SCROLL FOR NEXT