செய்திகள்

இந்தியாவிலேயே சிறந்த நடிகர் ரன்பீர் கபூர்தான்: மகேஷ் பாபு பாராட்டு!

பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு அனிமல் டீசர் பார்த்து பைத்தியம் பிடித்து விட்டதாக கூறியுள்ளார். 

DIN

தெலுங்கில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் மகேஷ் பாபு. தற்போது குண்டூர் காரம் படம் வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது.  அனிமல் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் மகேஷ் பாபு கலந்து கொண்டார். 

அர்ஜுன் ரெட்டி எனும் தெலுங்கு படத்தினை இயக்கியவர் சந்தீப் ரெட்டி வங்கா. இந்தப் படம் விமர்சன ரீதியாக மட்டுமல்லாமல் நல்ல வசூலையும் பெற்றது. இந்த இயக்குநரின் ‘அனிமல்’ படத்தில் பிரபல ஹிந்தி நடிகர் ரன்பீர் கபூர் நடித்துள்ளார்.

இதில் ராஷ்மிகா 'கீதாஞ்சலி' எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இயக்குநரின் சொந்தத் தயாரிப்பான பத்ரகாளி பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்துக்கு ஒளிப்பதிவு - அமித் ராய். 

ஹைதராபாத்தில் நேற்று நடந்த அனிமல் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி, நடிகர் மகேஷ் பாபு, ரன்பீர், ராஷ்மிகா  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பிரமாண்டமான நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் ரசிகர்கள் மிகுந்த ஆதரவு அளித்தார்கள். 

இந்த நிகழ்ச்சியில் மகேஷ் பாபு, “நான் ரன்பீரை பார்க்கும்போதும் நான் அவரது ரசிகன் எனக் கூறினேன். அவர் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. தற்போது இந்த மேடையில் கூறுகிறேன். என்னைப் பொருத்தவரைக்கும் இந்தியாவிலேயே சிறந்த நடிகர் ரன்பீர் கபூர்தான். நான் அவரது ரசிகன். அனிமல் படம்தான் இதுவரை வெளியானதில் ரன்பிரின் சிறந்த நடிப்பாக இருக்கும். 

அனிமல் டீசரை பார்த்து பைத்தியம் பிடித்து விட்டது. சந்தீப் ஒரிஜினலான இயக்குநர்.  பாபி தியோல் அட்டகாசமாக நடித்துள்ளார். படம் மாபெரும் வெற்றியடைய வாழ்த்துகள்” எனக் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ.88.66 ஆக நிறைவு!

பிரதி மாதம் மாமன்றக் கூட்டத்தை நடத்த பாஜக வலியுறுத்தல்

கருங்குயில்... திவ்யா துரைசாமி!

மகளிர் உலகக் கோப்பை தோல்வி எதிரொலி! பாகிஸ்தான் அணி தலைமைப் பயிற்சியாளர் நீக்கம்!

பிலிப்பின்ஸில் ‘கேல்மெகி புயல்’ கோரத்தாண்டவம்: 26 பேர் உயிரிழப்பு!

SCROLL FOR NEXT