கோப்புப்படம் 
செய்திகள்

எம்.ஜி.ஆர். கெட்டப்பில் வரும் கார்த்தி!

நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் படத்தில் எம்ஜிஆர் தோற்றத்தில் கார்த்தி வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

DIN

நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான சர்தார், பொன்னியின் செல்வன்  படங்கள் வியாபார ரீதியாக பெரும் வெற்றி பெற்றன.

அதன்பின், ட்ரீம் வாரியர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் ராஜூ முருகன் இயக்கத்தில் ‘ஜப்பான்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இது கார்த்தியின் 25-வது படமாகும். தீபாவளிக்கு வெளியாகும் ஜப்பான் படத்தில் அனு இம்மானுவேல் நாயகியாக நடிக்கிறார். 

அதனைத் தொடர்ந்து, ‘சூது கவ்வும்’, ‘காதலும் கடந்து போகும்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்து வருகிறார். இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படத்தில் சத்யராஜ், கீர்த்தி ஷெட்டி, ராஜ்கிரண் ஆகியோர் நடித்து வருகின்றனர். 

இந்நிலையில் ராஜ் கிரண் இப்படத்தில் தீவிர எம்.ஜி.ஆர் ரசிகராக நடித்து வருகிறார். அவரது பேரனாக நடிக்கும் கார்த்தியும் எம்.ஜி.ஆர் ரசிகராக நடிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ஒரு காட்சியில் கார்த்தி எம்.ஜி.ஆர் கெட்டப்பிலேயே வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முழு வணிகரீதியிலான உருவாகிவரும் இப்படத்தில் பாடல்கள் மற்றும் ஆக்‌ஷனுக்கு முக்கியத்துவம் அளித்து உருவாக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போக்கோ எம்8 5ஜி ஸ்மார்ட் போன் அறிமுகம்!

மார்ச் 31-க்குள் 300 நக்சல்களை ஒழிக்கும் நடவடிக்கைகள் தீவிரம்!

"விடுதிகளுக்கு AC வசதி!" விளையாட்டு வீரரின் வேண்டுகோளுக்கு துணை முதல்வர் தந்த பதில்!

சர்வதேச விளையாட்டு நகரம்!அடிக்கல் நாட்டிய முதல்வர் ஸ்டாலின்!

பஞ்சாபில் தொடரும் அவலம்! மற்றொரு ஆளுங்கட்சி நிர்வாகி சுட்டுக்கொலை!

SCROLL FOR NEXT